மரியாதைக்குரிய குரு சுகந்தினிக்கு,
கடந்த 4 வருடங்களாக நான் உங்களுடன் பயணிக்கிறேன்.தாரமும் குருவும் தலை விதிப்படி என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள், நான் எந்த பிறவியில் செய்த புண்ணியமோ தங்களை குருவாக பெற்றதற்கு பிரபஞ்சத்திற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
உங்களது அனைத்து சேவைகளின் பலன்களையும் நான் பெற்றிருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்,தங்களிடம் healing எடுத்திருக்கின்றேன்,Reiki level 1&2, மற்றும் ultimate Reiki வரை படித்திருக்கிறேன்.Inner child meditation ல் பங்கேற்றிருக்கிறேன்,மற்றும் தங்களது 21 days meditation sessions,48 days free meditation sessions,full moon day meditation and new moon day meditation மற்றும் தங்களின் free seminar sessions வரை என்னால் முடிந்த அளவுக்கு எதையும் தவற விடவில்லை என்று நினைக்கிறேன்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் தங்களுடன் தொடர்பு கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் நான் வீணாக தவற விட விரும்பவில்லை.ஒரு மிகச் சிறந்த குருவாக,தாயாக,சகோதரியாக,நல்ல நண்பியாக,நலன் விரும்பியாக பல பரிமாணங்களில் எங்களுடன் பயணிக்கும் தங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் உங்களை நம்பி வரும் ஒவ்வொருவருக்கும் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மனப்பூர்வமாக நீங்கள் செய்யும் உதவிகளை பணத்திற்காக செய்யும் ஒரு தொழிலாக இல்லாமல் ஒரு சேவையாக உங்களை அர்ப்பணித்து செய்து வருவதை நான் நன்றாகவே உணர்கிறேன்.தங்கள் மீது உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையால் எனது குடும்ப உறுப்பினர்கள் 5 வருடைய Vedic numerology பலன்களையும் தெரிந்து கொண்டேன்,அண்மையில் Akashic records மூலம் எனது கேள்விகளுக்கு விடை கிடைத்தது.தங்களை நம்பி வந்த எந்த ஒரு விடயத்திலும் எனக்கு கிடைத்து மிகச் சரியான வழி காட்டுதலும், நம்பிக்கையும்,ஆதரவும்,வெற்றியும் மட்டுமே என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.ஒரு குருவாக நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த விஷயங்கள் எல்லாம் என்னை மிகவும் பக்குவப்படுத்தி இருப்பதுடன் எனது ஆன்ம முன்னேற்றத்திற்கும் வழி காட்டுகிறது.தங்களை குரு குருவாக அமைத்துக் கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்,தங்களின் அன்புக்கும் ஆசிர்வாதங்களுக்கும்,வழிகாட்டுதலுக்கும் அளவில்லா நன்றிகள்.தங்களின் சேவை மென்மேலும் சிறக்க,தேவையுடையோர் பலர் தங்களின் சிறப்பான சேவையை பெற்று வாழ பிரபஞ்சம் ஆசிர்வதிக்கட்டும்.
மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻